Sunday, October 19, 2008

கவிதைகள்

மூளையில்
ஒரு மூலையில்
பொறிதட்டினாற் போல்
நினைவிருக்கிறது
சிறு வயதில்சரித்திரம்
படிக்கும்
அம்மா என்னைதிட்டி,அதட்டி,அடித்து
உச்சரிக்க சொன்னார்
"காரல் மார்க்ஸ்"
"தாஸ் காப்பிட்டல்", "கம்யூனிசம்"
என்றுபுரியாமல் புலம்பிகொண்டு உளறினேன்
யின்றோ
சரித்திரம் புரிந்து உணர்வு கொள்ளும்போது
உச்சரிக்கவே
கூடாதென்கிறார்"புரட்சியை" சொல்லாலும்
உணர்வாலும்உச்சரிக்கவே
கூடாதென்கிறார்கொடுக்கப்பட்டிருக்கும் "வரலாறு" பாடபுத்தகத்தின்பக்கங்களை
தாண்டிசிந்திக்க சிந்திக்க முடியவில்லை
அவரால்
பகுத்தறிவோடு மார்க்ஸியத்தை
கையிலேந்திவர்க்கச்மூகத்தை
காண்பிப்போம் நாம்
நாங்கள் "பெரியவர்கள்"எங்களுக்கேவா?
என்றால்"பெரியவர்கள்" என்ற
சொல்லின் பொருள் வயதின்
பின்னே அடங்குவதில்லை
சிந்தனை - உணர்வின் பின்னே
அடங்கியுள்ளதுவாருங்கள்
உண்மைவரலாறை படிக்க மட்டுமல்ல்
படைக்கவும் கற்றுத்தருவோம்
உங்களுக்கு.




No comments: