Saturday, December 20, 2008

கலகம்

கலகம்
இனி வேர்டு பிரஸ்-ல் மட்டுமே


http://kalagam.wordpress.com/

Thursday, November 13, 2008

தேவை : சாதிக்கெதிராய் கலகம்

"காலேஜுல படிக்கறவனுங்க மாதிரியா நடந்துக்கிறானுங்க, ரவுடிமாதிரியில்லநடந்துக்கிறானுங்க",பாவம் அந்த பையன் கீழ விழுந்துட்டான்,ஒரு மனுசாள அத்தன பேரு அடிச்சாங்களே மிருகம் மாதிரியில்ல யஇருக்கு" இதெல்லாம் நேற்று சென்னை சட்டக்கல்லூரியில் நடந்த அடிதடி குறித்து வெளியில் மக்கள்பேசிக்கொண்டு ஏன் எதற்காக இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது என்பதை அறியவோதீர்வை சொல்லவோ அவசியமின்றி திரிகிறர்கள்.
இன்று காலை தினமலர் தவிர ஏறக்குறைய அனைத்து தினசரிகளிலும் தொலைக்காட்சிகளிலும் சட்டக்கல்லூரி தான் முதல் தலைப்பு செய்தி.ஒரு திரைப்படத்தை எப்படிவர்ணிப்பார்களோ அதை விட சற்று தூக்கலாக வர்ணித்திருந்தர்கள்.ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால் தனது நாய் மூக்கினால் மோப்பம் பிடித்து "உண்மையை" வெளி கொணரும்எந்த ஒரு செயலையும் செய்யாது யார் கதா நாயகன் யார் வில்லன் என்று மட்டும் சரியாய்அடையளம் காட்டின.அதாவது தற்போது அடித்த தலித்துகள் வில்லன்ளாகவும்செய்த வினைக்கு எதிர் வினை வாங்கிய ஆதிக்க சாதி வெறியன்கள் தான் காதாநாயகன்களாகவும் காட்டப்படுகிறனர்.
சென்னைக்கு வெளியெ இருக்கும் பலருக்கும் ஒரு வகையன சிந்தனை இருக்கிறது"சென்னையில தலித்துங்க அதிகம் நம்மாளு வாய் திறந்து பேசவே பயப்படுவாங்க "சென்னையில் தலித் ரவுடிகள் இருக்கிறர்கள் என்பது உண்மை தான். ஆனால் ஆதிக்க சாதி வெறிஅர்கள் போல சாதிக்கு வாழ்ந்து சாவதில்லை.சேத்து பட்டு ரவுடி தங்கையா போல பலம்,பணதிற்காகயாராயிருந்தாலும் அவர்களிடம் தன் வேலையை காட்டுகின்றர்கள்.(பாதிக்கப்படுபவர் தலித்தாக இருப்பினும்).ஆதிக்க சாதி வெறியர்கள் செய்வது போல் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களின் பெண்களை மட்டும் பாலியல் ரீதியிலானகொடுமைகள்நடப்பதில்லை. இ£ங்கு சாதி என்பதை விடபணமே முக்கியம்.தனது அதிகாரமே முக்கியம்.அதை நிரூபிக்கதலித்தாக இருப்பினும் எந்த சாதியாக இருந்தாலும் தாக்கப்படுகின்றனர்.
சென்னை சட்ட கல்லுரி சம்பவம் என்பது வினைக்கு எதிர் வினை.இதனை நாம் ஆதரிக்கவில்லை என்றாலும்ஊடகங்களின் பார்பனிய தன்மையை அம்பலப்படுதியே தீரவேண்டும் என்பது தான் நோக்கம். சட்டக்கல்லூரியில்தேவர் சாதி வெறியர்கள் ஏதாவது விழாவெனில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி என்பதற்கு பதில்வெறும் சென்னை சட்டக்கல்லுரி என்று போடுவது,தொடர்ச்சியாக தீண்டாமையை மேற்கொள்வது போன்றசெயல்களில் ஈடுபட்டு வந்தனர்.கடந்த ஒரு மாதமாகவே இரு தரப்பினருக்கும் கைகலப்புஏற்பட்டிருக்க தலித் மாணவர்கள் காயம்பட்டிருக்கின்ரார்கள்.எதற்கும் ஒரு எல்லை உண்டு என்பதன் விதமாக பரிட்சை முடிந்தவுடன் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சிலர் எதிர் தாக்குதல் தொடுக்க முடிவெடுத்திருக்கின்றார்கள்இது தெரிந்தும் அந்த தேவர் சாதி வெறியர்களும் கையில் கத்தியோடு வந்திருக்கின்றனர்.முக்கியமாக நினைவில் கொள்ளவேண்டிய விசயம் .நாம் ஊடகங்களில் பார்த்ததது போல் கத்தியோடு வந்தவன் தாழ்த்தப்பட்ட மாணவர் தரப்பினைகுத்தியவுடன் தான் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இரண்டு பேரையும் வெறி கொண்டு தாக்கினார்கள்.
என் நண்பர் சொன்னர் " என்னால் அதை பார்க்கமுடியவில்லை,அவன் சாதி வெறியனாகவேஇருக்கட்டுங்க அவன் எப்படி கதறுனான் பார்க்கவே சகிக்க முடியலிங்க" ஒரு சாதி வெறியனின் மரண ஓலத்தை பார்த்து நாம் வருந்த வேண்டியதில்லை.ஆனால் சாதி வறிக்கெதிராக போராடும் மக்களின் ஒரு முக மற்றும் நேர் படுத்த படாத அரசியல் செயல் பாடுகள் சாதி வெறியர்களின் வளர்ச்சிக்கு துணை போகின்றன.அதற்காக நாம் கண்டிப்பக வருந்தத்தான் வேண்டும்.
சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு இது.நான் கல்லூரில் படித்து கொண்டிருக்கும் போது தான் எஸ்.பி.பொன் மாணிக்கவேல்தலைமையில் போலீசார் சென்னை சட்ட கல்லுரியினுள் புகுந்து தாக்கினர்.அது குறித்து நான் பேசிக்கொண்டு இருந்த்தேன்.அப்போதுபேருந்து நண்பர் (வயது 40) சொன்னர்.அவனுங்க எல்லாம் பறைப்பசங்க தப்பு செய்யாம போலிஸ் அடிப்பானா ? எனக் கேட்டார்.
இப்போது வரை அதைப் போன்ற வன்மம் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பரப்பப்படுகின்றது.எந்த இடத்தில் எல்லாம் ஒடுக்க்ப்பட்ட,தாழ்த்தப்பட்ட மக்கள் போராடினாலும் அவர்களுக்கெதிராக ஊடகங்கள் தான் முதல் கொள்ளியை வைக்கின்றன.ஏன் திண்ணியத்தில் மனிதன் வாயில் மலத்தை திணித்த போது கூட ராமசாமி பறை அடிச்சு பனத்த் கேக்காம இருந்திருந்தாஅவன் எதற்கு அப்ப்புடி பண்ணப்போறான் என்ற ரீதியில் தான் ஊடகங்கள் எழுதின. உத்த புரத்துல கூட செவுரு இருந்தா என்ன இப்போ?என்ற சாதி வெறியன் நேரடியாய் சொன்னால் அதையே ஊடகங்கள் மறைமுகமாய் சொல்கின்றன.
ஒரு கிராமத்தில் சாதிபிரச்சனை என்ற உடன் "ஊர்க்காரர்களுக்கும் அந்த குறிப்பிட்ட சமூகத்தினருக்கும்" என்று தான்கொட்டைஎழுத்தில் போட்டு தன் பார்ப்பனீய அடிவருடி த்தனத்தை வெளிப்படுத்துகின்றனர்.இந்த கல்லூரி பிரச்சனையை கண்டித்து தேவர் சாதி வெறியர்கள் சென்னையில் மீட்டிங் போட்டு கண்டனம் தெரிவிக்கின்றன.ஓட்டு பொறுக்கிகளோசாக்கு கிடத்தால் போது மென சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செஇகின்றன.இவையனைத்தும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவே நடைபெற வில்லை நடத்தப்படுகின்றன.உண்மையில் இப்போது நடந்ததுசம்பவம் சாதிக்கு எதிராக வினை.இவ்வினை ஏற்புடையது அல்ல .சண்டைகள் மட்டும் தீர்வு தராது.அது எதிரிகள் வளரவே உதவும். மக்களை திரட்டி சாதிக்கு எதிராக கலகம் புரிவோம்.அதில் கண்டிப்பாய் பார்ப்பனீயம் உயித் தெழாது.

Tuesday, November 11, 2008

கவிதைகள்

அழகென்றால்
எதுவென்று விடை
தேடி புறப்பட்டேன்.....

உச்சி முதல் உள்ளங்கால்
வரைஒவ்வொன்றும்
வரிசையாய் வந்தன,
நீ நான் என போட்டி
போட்டுக்கொண்டு......

சிறும் பல், பெரும் பல்
தெத்து பல் பலவும்
பல்லளித்து பறைசாற்றின
பற்களெல்லாம் அழகெனில்
ஊத்தைவாயன் சங்கரனின்
பல்லும் அழகா ? ...

ஒல்லி குச்சிகால்கள்
கேட்வாக்கில்
ஒய்யாரமாய்
நடை போட்டு நடந்தன
நடப்பதோ சுடுகாட்டை
நோக்கி இதில் நாய்
நடையே நடந்தாலும்
கேட்க ஆளில்லை.....

உடைகள் மேலே
ஏற ஏற
அழகுகள்
கூடிக்கொண்டே போகின்றன......

இது தான் அழகா
யில்லை யில்லை
அழகென்றால் எது
வென்று செப்புகின்றேன்
கேளிர்
பண்பட்ட நிலமழகு
கூரொடிந்த ஏரழகு
உழைப்பாளியின்
வியர்வையழகு தொழிலாளியின்
அசதியழகு,அழகு அழகு
ஆயிரமழகு புரட்சி
அதனினும் அழகு
மக்கட்படை...

அன்று புரியவைப்போம்
நீங்கள் அழகுகள் அல்ல
இன்னாட்டின் அசிங்கங்கள் என்று.

கவிதைகள்

சிரிப்பதெற்கென்றெ நாள்

ஒருநாள் கற்றுக்கொடுக்கிறது

உலகம்.,இளிக்கிறான் உலக

வங்கி -மின்னுகிறது தங்கப்பல்....

சிரிப்பு தினம்

பெண்கள் தினம்

தாய் தினம்

தந்தையர் தினம்

சடங்குகள் தொடர்கின்றன....

கடற்கரையோரம் சிறு கூட்டம்

சிரிக்கிறது - சிரித்தால்

ஆயுள் அதிகரிக்குமாம்

அன்னிய செலாவணி

போல வீங்கிய உடல்கள்

வாய்கள் இளித்துக் கொண்டே

இருக்கிறது-எங்கள்

கண்ணீரின் முதலீட்டில்....

உழைத்து உழைத்து

வெடித்து போன எங்கள்

உதடுகளை

உங்களால்சிரிக்க வைக்க முடியாது....

விவசாயி,தொழிலாளி

வணிகர்கள் என அனைவரும்

அழுதுகொண்டிருக்க

சிரியுங்கள்,சிரியுங்கள்

சிரித்து கொண்டேயிருங்கள்...

அழுது அழுது வற்றிபோன

எங்கள் கண்களில் கண்ணீர் இல்லை

கலகம் ஒன்றே யெங்களை

சிரிக்க வைக்கும் உங்களை

கதறவும் வைக்கும்.

கவிதைகள்

பத்து மாதம் மூச்சு
முட்டபால் குடித்து
பின்அம்மார்பகத்தையே
பேனாவில்வடிக்கிறான் -
நம்புங்கள் இவன் கவிஞன்.........


தட்சனைக்கு
அதிகமாய்மணியடிப்பவனை
விடபோதையூட்டி
தருகின்றான்அது தமிழ்ப்போதை.........

தாயிடம் , தமக்கையிடம்வாங்கிய
முத்தங்கள்சாயம்பூசி
விற்கின்றான்கள்ளக்காதலிகளின்
லிப்டிக்குகளோடு.....

கவியரசு,கவிபேரரசு,
வித்தகக்கவி,என
பட்டங்கள்தேடி வரும் -
விபச்சார பேனாவுக்கு
சரக்குஎங்கிருந்து
தன் வீட்டைத் தவிர.......

கழுத்திலே கத்தியைவைத்தாலும்கூட
மக்களுக்காகஎழுதாது-
உழைக்காதபேனா
உழைப்போரின்விதியை
எழுதிடுமாயென்ன?

தினம் விடி காலை
எழுந்துஉழைத்து ஓடாய்
தேய்ந்துஎங்கள் விவசாயியின்
வாழ்க்கை தான் - கவிதை.......

சவுக்கடியும்,
சாணிப்பாலையும்மறக்காத ,
பாடாதபாடல் தான்
எப்படத்திலும்வராத சோகப்பாடல்....

எப்போதும்
எங்கள்கவிதை
வறுமையாகவும்,பாடல்
சோகமாய்மட்டுமிருக்கப்போவதில்லை...

களத்தில் நிற்கும்எங்கள்
போராளிக்குஎதுகை
மோனை தெரியாது,
செந்தமிழில் பாடல் புனையத்தெரியாது......


ஆனால் வறுமையின்
வலிதெரியும்,ரத்ததின்
வெப்பம்புரியும்.,அவர்கள்
மக்களை படித்தவர்கள்
மக்களோடு வழ்ந்து
மக்களுக்காக இறப்பவர்கள்-ஆம்
அவர்கள் தான் மக்களின் கவிஞர்கள்.

Friday, November 7, 2008

கவிதைகள்

காந்தியின்
கனவைநம்பி
தன்னந்தனியாய்இரவில்
இரவில் செல்லத்துணிந்திடாதே
பெண்ணே
காந்தியின்வாரிசுகள்
காத்திருக்கிறார்கள்கையில்
கத்தியோடு.