Tuesday, November 11, 2008

கவிதைகள்

சிரிப்பதெற்கென்றெ நாள்

ஒருநாள் கற்றுக்கொடுக்கிறது

உலகம்.,இளிக்கிறான் உலக

வங்கி -மின்னுகிறது தங்கப்பல்....

சிரிப்பு தினம்

பெண்கள் தினம்

தாய் தினம்

தந்தையர் தினம்

சடங்குகள் தொடர்கின்றன....

கடற்கரையோரம் சிறு கூட்டம்

சிரிக்கிறது - சிரித்தால்

ஆயுள் அதிகரிக்குமாம்

அன்னிய செலாவணி

போல வீங்கிய உடல்கள்

வாய்கள் இளித்துக் கொண்டே

இருக்கிறது-எங்கள்

கண்ணீரின் முதலீட்டில்....

உழைத்து உழைத்து

வெடித்து போன எங்கள்

உதடுகளை

உங்களால்சிரிக்க வைக்க முடியாது....

விவசாயி,தொழிலாளி

வணிகர்கள் என அனைவரும்

அழுதுகொண்டிருக்க

சிரியுங்கள்,சிரியுங்கள்

சிரித்து கொண்டேயிருங்கள்...

அழுது அழுது வற்றிபோன

எங்கள் கண்களில் கண்ணீர் இல்லை

கலகம் ஒன்றே யெங்களை

சிரிக்க வைக்கும் உங்களை

கதறவும் வைக்கும்.

No comments: