Tuesday, November 11, 2008

கவிதைகள்

அழகென்றால்
எதுவென்று விடை
தேடி புறப்பட்டேன்.....

உச்சி முதல் உள்ளங்கால்
வரைஒவ்வொன்றும்
வரிசையாய் வந்தன,
நீ நான் என போட்டி
போட்டுக்கொண்டு......

சிறும் பல், பெரும் பல்
தெத்து பல் பலவும்
பல்லளித்து பறைசாற்றின
பற்களெல்லாம் அழகெனில்
ஊத்தைவாயன் சங்கரனின்
பல்லும் அழகா ? ...

ஒல்லி குச்சிகால்கள்
கேட்வாக்கில்
ஒய்யாரமாய்
நடை போட்டு நடந்தன
நடப்பதோ சுடுகாட்டை
நோக்கி இதில் நாய்
நடையே நடந்தாலும்
கேட்க ஆளில்லை.....

உடைகள் மேலே
ஏற ஏற
அழகுகள்
கூடிக்கொண்டே போகின்றன......

இது தான் அழகா
யில்லை யில்லை
அழகென்றால் எது
வென்று செப்புகின்றேன்
கேளிர்
பண்பட்ட நிலமழகு
கூரொடிந்த ஏரழகு
உழைப்பாளியின்
வியர்வையழகு தொழிலாளியின்
அசதியழகு,அழகு அழகு
ஆயிரமழகு புரட்சி
அதனினும் அழகு
மக்கட்படை...

அன்று புரியவைப்போம்
நீங்கள் அழகுகள் அல்ல
இன்னாட்டின் அசிங்கங்கள் என்று.

No comments: